Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Super User / 2010 ஒக்டோபர் 30 , பி.ப. 02:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
இலங்கையின் 36 ஆவது தேசிய விளையாட்டு விழா இன்று சனிக்கிழமை கண்டி போகம்பறை விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகியது.
போட்டிகள் இன்று காலையில் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் உத்தியோகபூர்வ ஆரம்ப வைபவம் இன்று மாலை 5 மணியளவிலேயே ஆரம்பமாகியது. கோலாகலமாக நடைபெற்ற இவ்வைபவத்தில் பிரதமர் டீ.எம். ஜயரத்ன பிரதம அதிதியாகக் கொண்டார்.
இவ்விழாவுக்கு நாட்டின் அனைத்து பாகங்களிலிருந்தும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பெருமளவில் கலந்து கொண்டனர். இலங்கையின் ஒன்பது மாகாணங்களையும் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் நடத்திய உடற்பயிற்சி மற்றும் கண் கவர் நிகழ்ச்சிகள் பலவும் இங்கு இடம்பெற்றன.
இலங்கையின் 36 ஆவது தேசிய விளையாட்டு விழா கண்டி நகரை மையமாகக் கொண்டு சுமார் 12 விளையாட்டு மைதானங்களிலே நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்விழாவில் விளையாட்டு துறை அமைச்சர் சீ.பீ.ரத்நாயக்க, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா, நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம, ஏ.ஆர்.எம்.ஏ.காதர் உட்பட இன்னும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
55 minute ago
1 hours ago