Super User / 2010 ஒக்டோபர் 30 , பி.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகின் முன்னிலை டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவரான ரஷ்யாவின் எலினா டெமென்டீவா தொழிற்சார் டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
கட்டாரில் நடைபெறும் மகளிர் டென்னிஸ் சங்கத்தின் சுற்றுப்போட்டியில் நேற்று நடைபெற்ற போட்டியொன்றில் பிரான்செஸ்கா ஷியாவோனிடம் 6-4, 6-2 விகிதத்தில் அவர் தோல்வியுற்றார். அதன்பின் டென்னிஸ் அரங்கில் வைத்து தனது ஓய்வை அவர் அறிவித்தார்.
29 வயதான எலினா, சர்வதேச மகளிர் டென்னிஸ் தரப்படுத்தலில் 3 ஆம் இடம்வரை முன்னேறியவர். மகளிர் டென்னிஸ் சங்கத்தின் போட்டிகளில் 16 சம்பியன் பட்டங்களை வென்றவர்.
2008 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றதன் மூலம் தற்போதைய மகளிர் ஒற்றையர் ஒலிம்பிக் டென்னிஸ் சம்பியனாகவும் அவர் விளங்குகிறார்.
1998 ஆம் ஆண்டு முதல் தொழிற்சார் டென்னிஸ் போட்டிகளில் பங்குபற்றிய அவர் தொடர்ச்சியாக 46 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது. மொத்தமாக 849 போட்டிகளில் பங்குபற்றிய அவர் 576 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில், சிறப்பாக விளையாடும் தருணத்திலேயே தான் ஓய்வு பெற விரும்புவதாக டெமென்டீவா அறிவித்தார்.
16 minute ago
26 minute ago
23 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
26 minute ago
23 Oct 2025