2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

முதலாவது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியாவை வென்றது இலங்கை

Super User   / 2010 நவம்பர் 03 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அவுஸ்திரேலிய அணியுடனான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி ஒரு விக்கெட்டினால்  வெற்றியீட்டியுள்ளது.

மெல்பேர்ன் நகரில் சற்றுமுன் முடிவடைந்த இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 239 ஓட்டங்களைப் பெற்றது. மைக் ஹஸி ஆட்டமிழக்காமல் 71 ஓட்டங்களைப் பெற்றார்.

இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களில் திஸேர பெரேரா 46 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 44.2 ஓவர்களில், 9  விக்கெட்டுகளை  இழந்து 243 ஓட்டங்களைப் பெற்றது.  ஏஞ்சலோ மத்தியூஸ் ஆட்டமிழக்காமல் 77 ஓட்டங்களைப் பெற்றார்.  அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்களில் ஷேவியர் டொரத்தி 46 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழத்தினார்.

3 போட்டிகள் கொண்ட இத்தொடரின் இரண்டாவது போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை சிட்னி நகரில் நடைபெறவுள்ளது.
 


  Comments - 0

 • imthiyas Wednesday, 03 November 2010 10:25 PM

  avsthraliyavukku sariyaana adi. ithupola ellaru nalla kodukkanu. ulakaththula avankathan nalla crikkatersvena ninaikkiranga. athu mattummlla avanka solratha iccyum eththukkiranga menmelum ilankaikku vetri warattum. nantri.

  Reply : 0       0

  jeyarajah Thursday, 04 November 2010 11:49 AM

  முரளியின் பந்துவீச்சை முகம் கொடுக்க முடியாத அவுஸ்ரேலியா கையில் பிழை கண்டுபிடித்ததற்கும் ,இது முரளியின் கடைசி போட்டி
  என்பதாலும் இந்த வெற்றி மிகவும் தேவையானது. வாழ்க இலங்கை அணி.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--