2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணிக்கு சிறந்த ஆரம்பம்

Super User   / 2010 நவம்பர் 13 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூஸிலாந்து அணியுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான வீரேந்தர் ஷேவாக், கௌதம் காம்பீர் ஆகியோர் வலுவான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இன்றைய இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 178 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

ஹைதராபாத் நகரில் நடைபெறும் இப்போட்டியில் நியூஸிலாந்து அணி நேற்றைய முதலாம் நாள் ஆட்டமுடிவின்போது 4 விக்கெட் இழப்பிற்கு 258 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.  இரண்டாவது நாளான இன்று சனிக்கிழமை 350 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் நியூஸிலாந்து அணியின் சகல விக்கெட்டுகளும் வீழ்ந்தன. நியூஸிலாந்து அணி தனது கடைசி 7 விக்கெட்டுகளை 97 ஓட்டங்களுக்குள் இழந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டிம் மெகின்டொஷ் 102 ஓட்டங்களையும் மார்ட்டின் குட்பில் 85 ஓட்டங்களையும் பெற்றனர்.
இந்திய பந்துவீச்சாளர்களில்  ஸஹீர்கான் 69 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் ஹர்பஜன் சிங் 76 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இன்று தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணியின் சார்பில் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கிய வீரேந்தர் ஷேவாக் 96 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் வெட்டோரியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கௌதம் காம்பீர் 54 ஓட்டங்களைப் பெற்றார்.

இன்றைய ஆட்டமுடிவின்போது இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 178  ஓட்டங்களைப் பெற்றிருந்தது. ராகுல் திராவிட் 7 ஓட்டங்களுடனும் சச்சின் 11 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--