2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

மூன்றாவது டெஸ்ட் போட்டியும் வெற்றிதோல்வியின்றி முடிவு: தரப்படுத்தலில் இலங்கைக்குப் பின்னடைவு

Super User   / 2010 டிசெம்பர் 05 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை - மேற்கிந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 5 ஆவது நாளான இன்றைய ஆட்டம் சீரற்ற காலநிலையால் ஆரம்பிக்கப்படவில்லை. அதனால் இப்போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுற்றுள்ளது.

பள்ளேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் மொத்தமாக 103 ஓவர்கள் மாத்திரமே விளையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணிவரை ஆட்டம் ஆரம்பிக்கப்பட முடியாது நிலையில் இப்போட்டி நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ஈ.ஆர்.ஐ.கிண்ணத்திற்கான இத்தொடரின் மூன்று போட்டிகளும் வெற்றி தோல்வியின்றி முடிவுற்றமை குறிப்பிடத்தக்கது.

இதனால் சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலின் டெஸ்ட் அணிகளுக்கான தரப்படுத்தலில் இலங்கை அணி 5 ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இச்சுற்றுப்போட்டி ஆரம்பிக்கப்படும்போது இலங்கை அணி மூன்றாம் இடத்திலிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்விரு அணிகளுக்கிடையிலான ஒருநாள் சுற்றுப்போட்டி டிசெம்பர் 9 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--