Super User / 2010 டிசெம்பர் 21 , பி.ப. 02:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் ஜக் கலிஸ் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கார் விபத்தொன்றில் சிக்கினார்.
அவர் ஓட்டிச்சென்ற கார் மதில் கடவையொன்றுடன் மோதியது. எனினும் அவர் காயமெதுவுமின்றி தப்பியதாக தென்னாபிரிக்க அணியின் பேச்சாளர் மைக்கல் ஒவென் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, மதுபோதை காரணமாக இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற கருத்தை அப்பேச்சாளர் நிராகரித்துள்ளார்.
நேற்று முடிவடைந்த இந்திய அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதல் இரட்டைச் சதத்தை ஜக் கலிஸ் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்விபத்து இன்று அதிகாலை 12.30 மணியளவில் ஏற்பட்டதாக உள்ளுர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும் அதிகாலை 2.00 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
6 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
9 hours ago