2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

அணி வீரரின் பெயரை மறந்த டோனி

Super User   / 2011 பெப்ரவரி 19 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மஹேந்திர சிங் டோனி, தனது அணி வீரர் ஒருவரின் பெயரை மறந்து சங்கடத்திற்குள்ளான சம்பவம் இன்று இடம்பெற்றது.

10 ஆவது உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி பங்களாதேஷின் டாக்கா,மீர்பூர் நகரில் ஸ்ரீ பங்களா தேசிய அரங்கில் இன்று சனிக்கிழமை ஆரம்பமாகியது.

போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பாக தொலைக்காட்சி நேர்காணலாளர் ரவி சாஸ்திரி கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில் வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ராவின் பெயர் டோனிக்கு மறந்துவிட்டது.

இப்போட்டியில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் யார் என ரவி சாஸ்திரி கேட்டார்.

'(ரவிச்சந்திரன்) அஸ்வின், (பியூஸ்) சாவ்லா, (சுரேஷ்) ரெய்னா ...இவர்களுடன் மற்றொரு வீரரும் விளையாட மாட்டார்கள் என சிரித்துக்கொண்டே பதிலளித்தார் டோனி.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--