2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

உள்ளக முப்பாய்ச்சலில் புதிய உலக சாதனை

Super User   / 2011 பெப்ரவரி 21 , பி.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உள்ளக அரங்கு முப் பாய்ச்சலில் பிரெஞ்சு வீரர் டெடி டம்கோ தனது சொந்த உலக சாதனையை முறியடித்துள்ளார்.
 
பிரான்ஸில் நடைபெற்ற தேசிய உள்ளக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டிகளில் டம்கோ (58 அடி, 9அங்குலம்)  (17.91 மீற்றர் ) பாய்ந்தார். இது முந்தைய உலக சாதனையைவிட ஒரு அங்குலம் அதிகமானதாகும்.
 
21 வயதான டெடி டம்கோ கட்டார் தலைநகர் டோகாவில் நடைபெற்ற போட்டியொன்றில் முன்னர் 58 அடி 8 அங்குலம்  பாய்ந்து உலக சாதனை படைத்திருந்தார்.

இப்போட்டியின் பின் அவர் கருத்துத் தெரிவிக்கையில் நான் சிறப்பான உடல் நிலையில் இல்லை. எனினும் உலக சாதனையை முறியடித்துள்ளேன் என்றார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--