2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

தோல்வியை தழுவியது அயர்லாந்து

A.P.Mathan   / 2011 பெப்ரவரி 25 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பங்களாதேஷ் - அயர்லாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் பங்களாதேஷ் அணி 27 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது.

உலக கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் 9ஆவது போட்டி பங்களாதேஷ் - அயர்லாந்து அணிகளுக்கிடையின் இன்று மாலை மிர்பூரில் நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதற்கமைய 49.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 205 ஓட்டங்களை மாத்திரமே பங்களாதேஷ் அணியினரால் பெறமுடிந்தது. இவ்வணி சார்பில் தமீம் இக்பால் அதிகப்படியாக 44 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். பந்துவீச்சில் அயர்லாந்து அணியின் போதா 9 ஓவர்கள் பந்துவீசி 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 45 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 178 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவிக்கொண்டது. பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சாளர் ஷபிபுல் இஸ்லாம் 8 ஓவர்கள் பந்துவீசி 21 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக பங்களாதேஷ் அணியின் தமீம் இக்பால் தெரிவு செய்யப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--