2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

பாகிஸ்தானிடம் போராடி தோற்றது இலங்கை

A.P.Mathan   / 2011 பெப்ரவரி 26 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கிடையில் இன்று கொழும்பு பிரேமதாஸ விளையாட்டரங்கில் இடம்பெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி 11 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது.

நாளைய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 277 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பாகிஸ்தான் அணி சார்பில் மிஸ்பா-உல்-ஹக் ஆட்டமிழக்காமல் 83 ஓட்டங்களையும் யூனிஸ்கான் 72 ஓட்டங்களையும் அதிகப்படியாக பெற்றுக்கொண்டனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 266 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 11 ஓட்டங்களினால் தோல்வியை தழுவிக்கொண்டது. இலங்கை அணி சார்பில் சாமர சில்வா அதிகப்படியாக 57 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் ஸஹீப் அப்ரிடி 10 ஓவர்கள் பந்துவீசி 34 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாகவும் அப்ரிடி தெரிவு செய்யப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--