2025 ஜூலை 12, சனிக்கிழமை

பாகிஸ்தான் அணிக்கு அபராதம்

Super User   / 2011 பெப்ரவரி 27 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற இலங்கை அணிக்கெதிரான போட்டியில் குறித்த நேரத்தில் பந்துவீசி முடிக்கத் தவறிய பாகிஸ்தான் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் சபை அபராதம் விதித்துள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணியின் தலைவர் சஹீட்அவ்ரிடிக்கு போட்டிக்கான ஊதியத்தில் 20 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. ஏனைய வீரர்களுக்கு 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நேரத்திற்குள் ஒரு ஓவர் குறைவாக வீசியதாக பாகிஸ்தான் அணி மீது குற்றம் சுமத்தப்பட்டது. மேற்படி போட்டியில் பாகிஸ்தான் அணி 11 ஓட்டஙகளால் வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .