2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

ஐ.ரி.என். தொலைக்காட்சி மீது வழக்குத் தொடர மஹேல ஜயவர்தன ஆலோசனை

Super User   / 2011 மார்ச் 01 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அரசாங்க தொலைக்காட்சி நிறுவனமான ஐ.ரி.என்னுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி இலங்கை கிரிக்கெட் அணியின் உப தலைவர் மஹேல ஜயவர்தன யோசித்து வருகிறார்.

இவர் பாகிஸ்தானுடனான உலக கிண்ணப் போட்டியின்போது ஆட்ட நிர்ணய சதியில் என்ற கருத்துப்பட தொலைக்காட்சியில் செய்யப்பட்ட விமர்சனமே இதற்கு காரணமாகும்.

தனது சட்டத்தரணி இது தொடர்பில் கடிதமொன்றை வரைந்து கொண்டிருப்பதாக மஹேல ஜயவர்தன தெரிவித்தார்.

மற்றுமொறு வீரரான திலான் சமரவீர மீதும் இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இப்போட்டியில் பாகிஸ்தான் வெல்லும் என வர்த்தகர் ஒருவர் 18,000 டொலர் பந்தயம் கட்டியிருந்தார் எனவும் அதனால் பலர் சேர்ந்து ஆட்டத்தை மாற்றியதாகவும் போட்டிக்கு மறுநாள் விமர்சனமென்று ஒளிபரப்பப்பட்டது.
 
அதன் பின்னர் மஹேலவும் திலானும் ஆட்டத்தை மாற்றியிருக்கலாம் என நாம் நினைக்கின்றோம் எனவும் விமர்சகர் குறிப்பிட்டார்.

இதனாhல் ஐ.ரி.என் தொலைக்காட்சிக்கு  எதிராக வழக்கு தாக்கல் செய்வது தொடர்பில்  மஹேல  யோசித்து வருகிறார்.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான குறித்த போட்டியில் 11 ஒட்டங்களால்  இலங்கை அணி தோல்வி கண்டது. இப்போட்டியில் மஹேல இரண்டு ஒட்டங்களுடனும் திலான் சமரவீர ஒரு ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்...


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--