2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

மேற்கிந்திய அணியின் பஸ், பங்களாதேஷ் அணித்தலைவரின் வீட்டின் மீது கல்வீச்சு

Super User   / 2011 மார்ச் 05 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மேற்கிந்திய அணியிடம் பங்களாதேஷ் அணி 9 விக்கெட்டுகளால் தோல்வியுற்றதையடுத்து ஆத்திரமடைந்த பங்களாதேஷ் ரசிகர்கள், மேற்கிந்திய அணியின் பஸ் மீது கல்வீச்சுநடத்தியதுடன் பங்களாதேஷ் அணித்தலைவர் வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தினர்.

நேற்று மீர்பூர் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் பங்களாதேஷ் அணி 18.5 ஓவரளில் 58 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. உலகக்கிண்ணப் போட்டிகளில் டெஸ்ட் அந்தஸ்துள்ள அணியொன்று பெற்ற மிகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய அணி 12.2 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தமை குறிப்பிடத்தக்கது.

அதன்பின் மேற்கிந்திய அணி ஹோட்டலை நோக்கி பயணம் செய்த பஸ் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும் அது பங்களாதேஷ் அணி வீரர்கள் பயணம் செய்யும் பஸ் என நினைத்தே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, மகுரா நகரிலுள்ள பங்களாதேஷ் அணித்தலைவர் சகீப் அல் ஹஷனின் வீட்டின் மீதும் கல்வீச்சு நடத்தப்பட்டதாக பங்களாதேஷ் பொலிஸார் இன்று சனிக்கிழமை தெரிவித்தனர்.

3 மாடிகள் கொண்ட இவ்வீட்டின் முன்பாக மோட்டார் சைக்கிள்களில் வந்து நின்ற சிலர் கல்வீச்சு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. அவ்வேளையில் சகீப்பின் தாயாரும் சகோதரிகளும் வீட்டில் இருந்துள்ளனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .