Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 ஏப்ரல் 01 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஏஞ்சலோ மத்தியூஸ் நாளை நடைபெறவுள்ள உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சுழற்பந்துவீச்சாளர் சுராஜ் ரந்தீவ் 15 பேர் கொண்ட இலங்கை குழாமில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் , சகலதுறை வீரர் ஏஞ்சலோ மத்தியூஸ் ஆகியோர் காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் வேகப்பந்துவீச்சாளர் சமிந்த வாஸ், சுழற்பந்துவீச்சாளர் சுராஜ் ரந்தீவ் ஆகியோர் ஏற்கெனவே மாற்றுவீரர்களாக மும்பைக்கு அழைக்கப்பட்டனர்.
இந்நிலையில் ஏஞ்சலோ மத்தியூஸின் உடல்நிலையில் போதிய முன்றேற்றம் ஏற்படாததையடுத்து சுழற்பந்துவீச்சாளரான ரந்தீவை அணியில் சேர்ப்பதற்கு ஐ.சி.சியிடம் இலங்கை கிரிககெட் சபை அனுமதி கோரியிருந்தது.
இப்போட்டி ஆரம்பமாகுவதற்கு 24 மணித்தியாலங்களுக்கு குறைவான அவகாசமே உள்ள நிலையில் ரந்தீவ்வை அணியில் சேர்ப்பதற்கு ஐ.சி.சி. இன்று அனுமதி வழங்கியது.
முத்தையா முரளிதரன் முழுமையாக குணமடையாவிட்டாலும் அவர் இறுதிப்போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளரான ஆஷிஸ் நெஹ்ராவும் காயம் காரணமாக இப்போட்டியில் பங்குபற்றமாட்டார் என கருதப்படுகிறது
atheef Saturday, 02 April 2011 05:13 AM
சமிந்த வாஸ் தான் இலங்கை அணிக்கு வேணும் சுராஜ் வேண்டாம் .
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
3 hours ago
5 hours ago