Super User / 2011 ஏப்ரல் 02 , மு.ப. 06:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் சம்பியன் கிண்ணத்திற்கு வரி செலுத்த கோரி சுங்க உத்தியோகஸ்தர்கள் அக்கிண்ணத்தை பறிமுதல் செய்த சம்பவம் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் நடைபெற்ற இலங்கை – நியூஸிலாந்து அரையிறுதிப் போட்டியின்போது காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இக்கிண்ணத்தை ஐ.சி.சி. அதிகாரிகள் கடந்த வியாழனன்று கொழும்பிலிருந்து விமானம் மூலம் மும்பைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் தங்கம், மற்றும் வெள்ளியினால் செய்யப்பட்ட 130,000 டொலர் பெறுமதியான இக் கிண்ணத்திற்கு சுமார் 50,000 டொலர் வரி செலுத்த வேண்டும் என இந்திய சுங்க உத்தியோகஸ்தர்கள் தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் இன்றுசெய்தி வெளியிட்டுள்ளன.
'வரி அறவிடப்படுவதை தவிர்க்க வேண்டுமானால் தமக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையான உலகக் கிண்ண இறுதிப்போட்டிக்கான டிக்கெட்டுகள் வழங்கப்பட வேண்டும் என அவர்கள் கோரினர்' என ஐ.சி.சி. அதிகாரியொருவர் கூறியுள்ளார்.
ஆனால். உலகக் கிண்ண இறுதிப்போட்டி முடிவடையும்வரை சம்பியன் கிண்ணத்தை வைத்துக்கொள்ளுமாறும் அதன்பின் தாம் அதை துபாய்க்கு எடுத்துச் செல்வதாகவும் ஐ.சி.சி.அதிகாரிகள் கூறியபோது சுங்க உத்தியோகஸ்தர்கள் குழப்பமடைந்தனராம்.
ஒரே மாதிரியான இரு சம்பியன் கிண்ணங்களை ஐ.சி.சி தயாரித்துள்ளது. அவற்றில் ஒன்று ஏற்கெனவே மும்பை வாங்கடே அரங்கில் உள்ளது. அதுவே வெற்றி பெறும்அணிக்கு பரிசாக வழங்கப்படும் என்பதை மேற்படி சுங்க உத்தியோகஸ்தர்கள் அறிந்திருக்கவில்லை.
6 minute ago
41 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
41 minute ago
54 minute ago
1 hours ago