2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

ரோஸ் போல் அரங்கின் முதல் டெஸ்ட் : இலங்கை முதலில் துடுப்பாட்டம்

Super User   / 2011 ஜூன் 16 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சற்றுமுன் ஆரம்பமானது. இங்கிலாந்து அணி நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் களத் தடுப்பை தெரிவு செய்தது.

திலகரட்ன தில்ஷான் காயம் காரணமாக விளையாடாத நிலையில் இப்போட்டியில் இலங்கை அணிக்கு குமார் சங்கக்கார தலைமை தாங்குகிறார்.

ஹாம்ப்ஷயர் பிராந்தியத்தின் சௌதாம்ப்டன் நகரிலுள்ள ரோஸ் போல் அரங்கில் இப்போட்டி நடைபெறுகிறது. இவ்வரங்கில் நடைபெறும் முதலாவது டெஸ்ட் போட்டி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வரங்கில் ஏற்கெனவே 12 ஒருநாள் சர்வதேச போட்டிகளும், 20 ஓவர்கள் போட்டிகள் இரண்டும் நடைபெற்றுள்ளன.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .