2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

'நாட்டுக்காகவே விளையாடுகிறேன்; அணித் தலைவர்களுக்காக அல்ல'

Super User   / 2011 ஜூன் 22 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தான் நாட்டுக்காகவே போட்டிகளில் விளையாடுவதாகவும் அணித்தலைவர்களுக்காக விளையாடுவதில்லை எனவும் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ்  சிங் கூறியுள்ளார்.

மேற்கிந்திய அணியுடனான ஒருநாள் போட்டிகளில் யுவராஜ் சிங் பங்குபற்றவில்லை. தன்னைவிட மிக கனிஷ்ட வீரரான சுரேஷ் ரெய்னாவின் தலைமைத்துவத்தின் கீழ் விளையாட விரும்பாதபடியாலேயே யுவராஜ் சிங் இச்சுற்றுப்போட்டியிலிருந்து விலகியிருந்தார் என வதந்திகள் உலவின.

இந்நிலையில், கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்குபற்ற வந்த யுவராஜ் சிங்கிடம் மேற்படி வதந்தி குறித்து கேட்கப்பட்டபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

'அந்த கேள்வி முற்றிலும் அடிப்படையற்றது. நான் சுகவீமுற்றிருந்தேன். இப்போது பயற்சியில் ஈடுபட ஆரம்பித்துள்ளேன். சுரேஷ் ரெய்னாவின் தலைமத்துவத்தின் கீழ் விளையாட நான் மறுத்தேன் என்பது முற்றிலும் அடிப்படையற்றது. நான் இந்தியாவுக்காகவே விளையாடுகிறேன். அணித்தலைவர்களுக்காக அல்ல' என யுவராஜ் சிங்  கூறினார்.

'சௌரவ், எம்.எஸ்.டோனி, கௌதம் காம்பீர் ஆகியோரின் கீழ் நான் விளையாடியுள்ளேன். பல தலைவர்களின் கீழ் நான் விளையாடியுள்ளேன். நான் அணிக்கு வந்து 5 வருடங்களின் பின்னர்தான் கௌதமும் டோனியும் வந்தனர். எனவே அப்படியான எந்த பிரச்சினையும் இல்லை' எனவும் அவர் தெரிவித்தார்.
 


  Comments - 0

 • sana Thursday, 23 June 2011 05:57 AM

  இவன் திமிரு புடிச்சவன்

  Reply : 0       0

  Niyas Lanka Thursday, 23 June 2011 11:11 AM

  தலைப்பை பார்த்து விட்டு என்னமோ நம் நாட்டு வீரர்களின் செய்தியாய் இருக்குமென்று நினைத்துவிட்டேன்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X