2021 மே 10, திங்கட்கிழமை

உலக கிண்ண றக்பி தொடரிலிருந்து விலக நேரிடும் : நியூஸிலாந்து எச்சரிக்கை

Super User   / 2011 செப்டெம்பர் 28 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அணிகள் மீதான வர்த்தக கட்டுப்பாடுகள் நீக்கப்படாவிட்டால் 2015 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ண றக்பி சுற்றுப்போட்டியிலிருந்து விலகுவது குறித்து நியூஸிலாந்து அணி ஆராயும் என நியூஸிலாந்து றக்பி யூனியனின் தலைவர் ஸ்டீவ் டேவ் இன்று கூறியுள்ளார்.

இவ்வாறு போட்டிகளிலிருந்து விலகும் முன்னெப்போதும் இடம்பெறாத நடவடிக்கை இறுதியான நடவடிக்கையாகவே இருக்கும் எனவும் ஆனால், அதை நிராகரிக்க முடியாது எனவும் ஸ்டீவ் டேவ் தெரிவித்துள்ளார்.

றக்பி விளையாட்டில் மிகப் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றான நியூஸிலாந்து  முன்னாள் உலக சம்பியனாகும். தற்போது 7 ஆவது உலகக் கிண்ண றக்பி சுற்றுப்போட்டி நியூஸிலாந்தில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

"உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெறும் வருடங்களில் முக்கிய அணிகளை சர்வதேச றக்பி சபையின் விதிகள் தண்டிக்கின்றன. ஏனெனில், அவ்வணிகளின் வழக்கமான டெஸ்ட் தொடர்கள் தண்டிக்கப்படுகின்றன. அத்துடன் அணியினர் போட்டிகளின்போது அவர்களின் விளம்பர அனுசரணைகளை முன்னெடுப்பதற்கும் அனுமதிக்கப்படுவதில்லை" என  அவர் கூறினார்.

இதனால் இவ்வருட உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்குபற்றுவது நியூஸிலாந்து அணிக்கு 10.3 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பை ஏற்படுத்தியுள்ளது எனவம் ஸ்டீவ் டேவ் தெரிவித்தார்.

எனினும் இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்கு அனைத்து தரப்பினருடம் கலந்துரையாடி கூட்டாக தீர்வுகாண்பதே எமது பாணியாகும் எனவும் அவர் கூறினார்.

உலகக்கிண்ணப் போட்டிகள் நடைபெறும் வேளையில் சுற்றுப்போட்டியின் அனுசரணையாளர்களின் போட்டி நிறுவனங்களுடன் விளம்பர ஒப்பந்தம் செய்வதற்கு வீரர்களுக்கு சர்வதேச றக்பி சபை தடைவிதிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அடுத்த உலகக்கிண்ண றக்பி சுற்றுப்போட்டி 2015 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.

 


  Comments - 0

  • Hot water Thursday, 29 September 2011 08:53 PM

    இதேபோன்ற பிரச்சினை 2002 ஐ.சி.சி. மினி உலகக்கிண்ணம் மற்றும் 2003 உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியின்போதும் ஏற்பட்டது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X