Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Super User / 2011 ஒக்டோபர் 07 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ். செல்வநாயகம்)
காலி சர்வதேச கிரிக்கெட் மைதான ஆடுகளத்தின் மோசமான தரம் குறித்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸில் (ஐ.சி.சி) உத்தியோகபூர்வமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
அண்மையில் நடைபெற்ற இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி காலியில் நடந்தது. இப்போட்டிக்கான ஆடுகளம் மிக உலர்ந்த நிலையில் இருந்தமை குறித்து இரு தரப்பு வீரர்களும் விமர்சித்திருந்தனர்.
குறிப்hக போட்டியின் ஆரம்பத்தில் பந்தின் சுழற்சி அளவுக்கதிமாக இருந்தமையும் பந்துகள் அசாதாரண வகையில் எகிறமையும் தெளிவானது என ஐ.சி.சி. பொது முகாமையாளர் டேவ் ரிச்சர்ட்ஸன் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
இந்த ஆடுகளத்திற்கு தடை விதிக்கப்படக்கூடிய நெருக்கடியும் எதிர்நோக்கப்பட்டது.
எனினும் காலி ஆடுகளம் மோசமானதாக தரப்படுத்தப்பட்டமை இது முதல் தடவை என்பதையும் துடுப்பாட்டத்திற்கும் பந்துவீச்சுக்கும் சமநிலையை ஏற்படுத்தும் வகையில் ஆடுகளத்தை முன்னேற்றுவதற்கு ஆடுகளத்தின் பராமரிப்பாளர் முன்வந்துள்ளமைமையையும் கருத்திற்கொண்டு நாம் எச்சரிக்கையை விதிக்கிறோம்' என ரிச்சர்ட்ஸன் தெரிவித்துள்ளார்.
ஆடுகள ஆலோசகர் அன்டி எட்கின்ஸனை இம்மாத இறுதியில் காலி ஆடுகளத்தை பார்வையிட்டு தேவையான சிபாரிசுகளை செய்யுமாறும் ஐ.சி.சி. பணித்துள்ளது.
இம்மைதானத்தில் அடுத்த சர்வதேச போட்டி நடைபெறுவதற்கு முன்னர் தேவையான திருத்தங்களை அமுல்படுத்துவது தொடர்பாக ஐ.சி.சி. ஸ்ரீலங்கா கிரிக்கெட் (இலங்கை கிரிக்கெட் சபை) அறிக்கையொன்றை சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago