2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

இரட்டைச் சதம் குவித்தார் சங்கக்கார; இலங்கை - பாகிஸ்தான் டெஸ்ட் வெற்றிதோல்வியின்றி முடிவு

Super User   / 2011 ஒக்டோபர் 22 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை ,  பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் ஐக்கியஅரபு எமிரேட்ஸின் அபுதாபியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவுற்றுள்ளது.

இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 197 ஓட்டங்களைப் பெற, பாகிஸ்தான் அணி 6 விக்கெட்இழப்பிற்கு 511 ஓட்டங்கள் பெற்ற நிலையில் துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது.

போட்டியின் 4 ஆவது நாளான நேற்றைய ஆட்டமுடிவின்போது இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 198 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. அவ்வணி இன்று 483 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. குமார் சங்கக்கார 211 ஓட்டங்களைப் பெற்றார். இது டெஸ்ட் போட்டிகளில் குமார் சங்கக்கார பெற்ற 8 ஆவது சதம் இதுவாகும்.  டெஸ்ட் கிரிக்கெட்டில்  டொன் பிரட்மன்(12), பிரையன் லாரா (8) ஆகியோர் மாத்திரமே குமார் சங்கக்காரவைவிட அதிக இரட்டைச் சதங்களை பெற்றவர்கள் ஆவர் .

பிரசன்ன ஜயவர்தன 120 ஓட்டங்களைப் பெற்றார்.  டெஸ்ட் போட்டிகளில் பிரசன்ன ஜயவர்தன பெற்ற 4 ஆவது சதம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி பெறுவதற்கு 170 ஓட்டங்கள் தேவையான நிலையில் பாகிஸ்தான் அணி இன்று மாலை தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது. அவ்வணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 21 ஓட்டங்கள் பெற்ற நிலையில் போட்டி முடிவுக்கு வந்தது. குமார் சங்கக்கார இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக தெரிவானார்.


 


  Comments - 0

 • Mohamed Irfan Sunday, 23 October 2011 02:30 AM

  தேங்க்ஸ்.

  Reply : 0       0

  nawas Sunday, 23 October 2011 02:55 AM

  நல்ல கிரிக்கெட் வீரர். இவர் போன்று மற்றைய வீரர்களும் விளையாட வேண்டும்!!!

  Reply : 0       0

  hameed Sunday, 23 October 2011 06:19 AM

  தான் நல்ல வீரர் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார்.

  Reply : 0       0

  ram Sunday, 23 October 2011 04:37 PM

  நீங்கதான் எங்கட ஹீரோ.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .