2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

இரண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானை வென்றது இலங்கை

Super User   / 2011 நவம்பர் 14 , பி.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் அணியுடனான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி  25  ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

துபாயில் 14 ஆம்திகதி திங்கட்கிழமை  நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 235 ஓட்டங்களைப் பெற்றது.

உபுல் தாரங்க 77 ஓட்டங்களையும் மஹேல ஜயவர்தன 50 ஓட்டங்களையும் பெற்றனர்.

பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களில்  சயீட் அஜ்மல் 61 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான்அணி முதல் ஓவரிலேயே 2விக்கெட்டுகளை இழந்தது.

லஷித் மாலிங்க வீசிய அந்த ஓவரின் 3 ஆவது பந்தில்  மொஹமட் ஹாபீஸும் 5 ஆவது பந்தில் இம்ரான் பர்ஹாத்தும் ஆட்டமிழந்தனர்.  அதன்பின் பாகிஸ்தான் அணி நெருக்கடியிலிருந்து மீளவே இல்லை.

46.3 ஓவர்களில் 210  ஓட்டங்களைப் பெற்ற நிலையில் அவ்வணி சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

பாகிஸ்தான் அணி சார்பில்  உமர் அக்மல் 91 ஓட்டங்களைப் பெற்றார். சஹீட் அவ்ரிடி 29 ஓட்டங்களைப் பெற்றார்.

இலங்கை அணி பந்துவீச்சாளர்களில் லஷித் மாலிங்க 36 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இத்தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வென்றது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது இரு அணிகளும் 1-1 விகிதத்தில் சமநிலையில் உள்ளன. 3  ஆவது போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை சார்ஜாவில் நடைபெறவுள்ளது.


  Comments - 0

  • ram Tuesday, 15 November 2011 09:26 PM

    well done !! & all the best to our team for oncoming matches.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X