2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

கொல்கத்தா டெஸ்ட்: பொலோ ஒன் நிலையில் மேற்கிந்திய அணி

Super User   / 2011 நவம்பர் 16 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்திய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி பொலோ ஒன் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் நடைபெறும் இப்போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 631 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 153 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

அவ்வணியின் சார்பில் அதிகபட்சமாக டெரன் பிராவோ 30 ஓட்டங்களைப் பெற்றார். இந்திய பந்துவீச்சாளர்களில் பிரக்யன் ஓஜா 64 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்ததினார்.

உமேஸ் யாதவ் 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் ரவிச்சந்திரன் 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பொலோ ஒன் நிலைக்குத் தள்ளப்பட்ட மேற்கிந்திய அணி இன்று தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது. ஆட்டமுடிவின்போது அவ்வணி 3 விக்கெட் இழப்பிற்கு 195 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

அட்ரியன் பாரத் 62 ஓட்டங்களையும் கேர்க் எட்வர்ட்ஸ் 60 ஓட்டங்களையும் பெற்றனர். மேற்கிந்திய அணி இன்னும் 283 ஓட்டங்களைப் பெற வேண்டியுள்ளது. நாளை வியாழக்கிழமை இப்போட்டியின் நான்காவது நாளாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .