2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

சிறைத் தண்டனைக்கு எதிரான மேன்முறையீட்டில் பாக். வீரர்கள் தோல்வி

Super User   / 2011 நவம்பர் 23 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஆட்டநிர்ணய சதி குற்றச்சாட்டுக் காரணமாக தமக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு எதிராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் சல்மான் பட் மற்றும் மொஹமட் அமீர் ஆகியோர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை லண்டன் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

இங்கிலாந்து அணியுடனான லோர்ட் டெஸ்ட் போட்டியின்போது வேண்டுமென்றே நோபோல் வீசிய குற்றச்சாட்டில் 27 வயதான சல்மான் பட்டிற்கு 30 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன்  19 வயதான  மொஹமட் அமீர் 6 மாத காலம் இளம்குற்றவாளிகளுக்கான சீர்திருத்த நிலையத்திற்கு அனுப்பப்பட்டார்.

இவர்களுடன் பந்துவீச்சாளரான மொஹமட் ஆசிப் மற்றும் சூதாட்ட முகவர் மஸார் ஜுனைத் மஜீத் ஆகியோருக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமக்கான தண்டனைக்கு எதிராக சல்மான் பட்டும் மொஹமட் அமீரும் மேன்முறையீடு செய்தனர். அமீர் தனக்கு ஒத்திவைக்கப்பட்ட தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று கோரினார்.

இவ்வழக்கை பிரதம நீதியரசர் மற்றும் இரு நீதிபதிகள் இன்று  தள்ளுபடி செய்தனர்.

ஊழல் தொடர்ந்தால் கிரக்கெட்டை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியானது கடைசியில் நாசமாகிவிடும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
 


  Comments - 0

  • Risvi Thursday, 24 November 2011 01:01 AM

    இவர்கள் சம்பளம் மட்டும் வாங்கிக்கொண்டு பாடுபட்டு விளையாடுகிறார்கள் என நாம் எண்ணிக்கொண்டிருக்க, லஞ்சம் வாங்கிக்கொண்டு தோற்றுப்போவதையும் வேலையை விட்டுவிட்டு தொலைக்காட்சிக்கு முன்னாலிருந்து நாம் பார்த்துக் கொண்டிருந்தோமே.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .