2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

டெஸ்ட் போட்டியில் வெல்லும் வாய்ப்பை ஒரு ஓட்டத்தினால் இழந்தது இந்தியா

Super User   / 2011 நவம்பர் 26 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய, மேற்கிந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி தோல்வியின்றி  முடிவுற்றுள்ளது.

இந்திய அணி வெற்றி வாய்ப்பை ஒரு ஓட்டத்தினால் தவறவிட்டமை குறிப்பிடத்தக்கது.

மும்பையில் நடைபெற்ற இப்போட்டியில் வெற்றி பெறுவதற்கு இந்திய அணிக்கு இரண்டாவது இன்னிங்ஸில் 243 ஓட்டங்கள் தேவைப்பட்டன. அவ்வணி 9 விக்கெட் இழப்பிற்கு 242 ஓட்டங்கள் பெற்ற நிலையில் இப்போட்டி முடிவுற்றது.

இப்போட்டியில் மேற்கிந்திய அணி முதல் இன்னிங்ஸில் 590 ஓட்டங்களையும் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 482 ஓட்டங்களையும் பெற்றன.

இப்போட்டியின் நான்காவது நாளான நேற்று தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த மேற்கிந்திய அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 81 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

போட்டியின் இறுதி நாளான இன்று அவ்வணி 134 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.  அவ்வணியின் சார்பில் ஆகக் கூடுதலாக டெரன் பிராவே 48 ஓட்டங்களைப் பெற்றார்.

இந்திய பந்துவீச்சாளர்களில்  47 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  ரவிச்சந்திரன் அஸ்வின் 34 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்திய அணி வெற்றி பெறுவதற்கு இரண்டாவது இன்னிங்ஸில் 234 ஓட்டங்கள் எனும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் போட்டி முடிவடைவதற்கு 64 ஓவர்கள் மாத்திரமே எஞ்சியிருந்தன.

இதனால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.  கடைசி ஓவர் ஆரம்பமானபோது இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 240 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

எனவே,  இந்திய அணி 3 ஓட்டங்களைப் பெற்றால் அவ்வணி வெற்றி பெறும் நிலை. மேற்கிந்திய அணி வெல்வதற்கு 2 விக்கெட்டுகளைப் பெற வேண்டியிருந்தது.

அந்த ஓவரின் 4 ஆவது பந்தில் ஆரோன் ஒரு ஓட்டத்தைப்பெற்றார். கடைசி பந்தில் இரு ஓட்டங்கள் தேவையான நிலையில் இரண்டாவது ஓட்டத்தை பெற முயன்றபோது அஸ்வின் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

இதனால் இரு அணிகளினதும் மொத்த ஓட்ட எண்ணிக்கை 724 ஆக அமைந்துள்ளமை குறிப்பித்தக்கது. டெஸ்ட் போட்டிகளில் சம எண்ணிக்கையான ஓட்டங்கள் பெறப்பட்ட நிலையில் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைவது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இது இரண்டாவது தடவையாகும்.


இந்திய அணியின் சார்பில் வீரட் கோலி 63 ஓட்டங்களையும் வீரேந்தர் ஷேவாக் 60 ஓட்டங்களையும் பெற்றனர்.
தனது 100 ஆவது சதத்திற்காக காத்திருக்கும் சச்சின் 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

3 ஆவது போட்டியில் 3 போட்டிகள் கொண்ட இத்தொடரில்இந்திய அணி 2-0 விகிதத்தில் வெற்றிபெற்றுள்ளது.

மூன்றாவது  போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் சுற்றுப்போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவானார். இது அவரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0

 • Kethis Sunday, 27 November 2011 12:07 AM

  மேற்கிந்தியத் தீவுகளிடம் ,அதுவும் சொந்த மண்ணில் இவ்வளவு திண்டாடுவது ஏன்?

  Reply : 0       0

  Kethis Monday, 28 November 2011 04:22 AM

  சுவாரஷ்யமான டெஸ்ட்போட்டி

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .