2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

முதலாவது ஒருநாள் போட்டியில் ஒரு விக்கெட்டினால் மேற்கிந்திய அணியை வென்றது இந்தியா

Super User   / 2011 நவம்பர் 29 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்திய அணியுடனான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கடும் போராட்டத்தின் பின்னர் ஒரு விக்கெட்டினால் வெற்றியீட்டியுள்ளது.

ஒரிஸா மாநிலத்தின் கட்டாக் நகரில் நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் இந்திய அணித்தலைவர் வீரேந்தர் ஷேவாக் வெற்றி பெற்றார். அதையடுத்து மேற்கிந்திய அணியை முதலில் துடுப்பெடுத்தாட அவர் அழைத்தார்.

18 ஓட்டங்கள் பெற்ற நிலையில் தனது முதல் விக்கெட்டை இழந்த மேற்கி;ந்திய அணி தொடர்ந்தும் ஓட்டங்களைக் குவிக்கத் திணறியது. 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 211 ஓட்டங்களை மாத்திரமே அவ்வணி பெற்றது.

அவ்வணியின் சார்பில் ஆகக்கூடுதலாக டெரன் பிராவோ 60 ஓட்டங்களையும் டென்ஸா ஹையத் 31 ஓட்டங்களையும் பெற்றனர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 48.5 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. ரோஹித் சர்மா 72 ஓட்டங்களைப் பெற்றார். ரவீந்திர ஜடேஜா 38 ஓட்டங்களைப் பெற்றார்.

வெற்றி இலக்கை நோக்கி முன்னேறி  கொண்டிருந்த இந்திய அணி 47 ஆவது ஓவரின் முதல் பந்துவீச்சின்போது,  11 ஓட்டங்களைப்  பெற வேண்டியிருந்த நிலையில் 9 ஆ ஆவதுவிக்கெட்டை  இழந்து கடும் நெருக்கடிக்குள்ளானது. 

இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக ரோஹித் சர்மா தெரிவானார்.

அந்த ஓவரில் மேலும் ஓட்டங்கள் எதுவும் பெறப்படவில்லை 48 ஆவது ஓவரில் இந்திய அணி2 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

எனினும் 49 ஆவது ஓவரின் 2 பந்தில் ஆரோன் 4 ஓட்டங்களைப் பெற்றதால் இந்திய அணி மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பியது. அந்த ஓவரின் 5 ஆவது பந்தில் யாதவ் 4 ஓட்டங்களைப் பெற்று இந்திய அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.

ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் இரண்டாவது போட்டி டிசெம்பர் 2 ஆம் திகதி விசாகப்பட்டிணத்தில் நடைபெறவுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X