2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

2012இல் இருபதுக்கு - 20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் 16 அணிகள் - ஐ.சி.சி

Super User   / 2010 ஜூன் 11 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

2012ஆம் நடைபெறவுள்ள இருபதுக்கு - 20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் 16 அணிகளை களமிறக்க சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) தீர்மானித்துள்ளது. குறித்த போட்டிகளில் விளையாடுவத்ற்கு ஏற்கனவே 6 அணிகள் தகுதி பெற்றுள்ள நிலையில், மேலும் 10 அணிகளை இணைத்துக்கொள்வதற்கு ஐ.சி.சி முடிவெடுத்துள்ளது.

2012ஆம் ஆண்டி நடைபெறவுள்ள இருபதுக்கு - 20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இலங்கையில் நடைபெறவுள்ளன.  இந்தப் போட்டிகளில் மொத்தம் 16 அணிகளை பங்கேற்க வைப்பதற்கான தகுதிச் சுற்று ஆட்டங்களை நடத்தவும் சர்வதேச கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

தற்போது, 6 அணிகள் தகுதி பெற்றுள்ள நிலையில் இந்த தகுதிச்சுற்று ஆட்டங்கள் மூலம் மேலும் 10 அணிகள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளன. இதற்கான, விரிவான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று ஐ.சி.சி அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--