2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

ஓய்வினை அறிவித்தார் சிந்தக்க ஜெயசிங்க

A.P.Mathan   / 2012 நவம்பர் 08 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் சகலதுறை வீரர் சிந்தக்க ஜெயசிங்க முதற்தரப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். இந்த ஓய்வினை அவர் நேற்று கொழும்பில் வைத்து அறிவித்தார்.

இலங்கை அணி சார்பாக 5 டுவென்டி டுவென்டி சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்றிய அவர் ஒரு சகலதுறை வீரராவார்.

5 டுவென்டி டுவென்டி சர்வதேசப் போட்டிகளில் 3 இனிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடிய அவர் அதிகபட்சமாக 38 ஓட்டங்களைப் பெற்றதோடு, ஏனைய இரண்டு இனிங்ஸ்களிலும் ஆட்டமிழந்திருக்கவில்லை. அவர் இறுதியாக 2010ஆம் ஆண்டு இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.

142 முதற்தரப் போட்டிகளில் பங்குபற்றிய அவர் 11 சதங்கள், 34 அரைச்சதங்கள் உட்பட 31.61 என்ற சராசரியில் ஓட்டங்களைப் பெற்றதோடு, 104 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தார். அவரது அதிகபட்ச ஓட்டங்களாக ஆட்டமிழக்காத 173 ஓட்டங்கள் காணப்படுவதோடு, சிறந்த பந்துவீச்சாக 44 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியமை காணப்படுகிறது.

14 வருடங்கள் உள்ளூர்ப் போட்டிகளில் பங்குபற்றிய போதிலும் இலங்கையின் தேர்வாளர்கள் தனக்கான வாய்ப்புக்களை வழங்கவில்லை எனத் தெரிவித்த அவர், கடந்த ஒரு தசாப்தமாக தேர்வாளர்கள் சில வீரர்களுக்கு அதிக வாய்ப்புக்களை வழங்கியதாகவும், அவர்கள் சிறப்பாகப் பிரகாசிக்காத போதும் வாய்ப்புக்கள் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

34 வயதான சிந்தக்க ஜெயசிங்க, எதிர்வரும் காலங்களில் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் உள்ளூர் லீக் போட்டிகளில் பங்குபற்ற எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .