2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

இலங்கை – இங்கிலாந்து போட்டியின் ஆட்ட நிர்ணய மோசடி அம்பலம்

Super User   / 2012 நவம்பர் 13 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

விருது பெற்ற விளையாட்டு ஊடகவியலாளரான எட் ஹோக்கிங் எழுதியுள்ள புதிய நூல் ஒன்றில், இங்கிலாந்தில் பரபரப்பாக கடந்த மே 2011 இல் காட்டிப் மைதானத்தில் இடம்பெற்ற இலங்கைக்கும் இங்கிலாந்திற்கும் இடையிலான டெஸ்ட் போட்டி முடிவு முன்னரே தீர்மானிக்கப்பட்டிருந்தது என அம்பலமாகியுள்ளது.

நான் விளையாடிய அதி சிறந்த போட்டிகளில் இதுவும் ஒன்று என இங்கிலாந்து அணியின் தலைவர் அன்ட்ரூ ஸ்டறவுஸ் தெரிவித்திருந்தார். நாளாம் நாள் முடிவில் 400 ஓட்டங்களை பெற்று சகல விக்கெட்டுக்களையும் இழந்த இலங்கைக்கு 491 ஓட்டங்களை இங்கிலாந்து பெற்றிருந்தது.

5ஆம் நாள் காலை மழை காரணமாக போட்டி குழம்பியிருந்த நிலையில் போட்டி சமநிலையில் முடிவடையும் என யாவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், 495 ஓட்டங்களுக்கு 5 விக்கெட் என்ற நிலையில் இங்கிலாந்து ஆட்டத்தை நிறுத்தி இலங்கையை விளையாட அழைத்தது.

பின்னர் 24.4 ஓவரில் 82 ஓட்டங்களுக்கு இலங்கையை ஆட்டமிழக்க செய்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி ஒரு இனிங்ஸ் 14 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. இதே சமயம் இலங்கை வீரர்கள் தமது சம்பளம் எட்டு வாரங்களாக கிடைக்காத நிலையில் பெரும் நிதி நெருக்கடியில் இருந்தாகக ஹோக்கிங் கூறியுள்ளார்.

2011ஆம் ஆண்டு இடம்பெற்ற உலக கிண்ண போட்டியின் மொஹாலியில்  பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானின் இனிங்ஸ் எவ்வாறு அமையும் என ஒரு புக்கிய சரியாக எதிர்வு கூறினார் என்ற பாணியிலும் இந்த புத்தகத்தில் ஹோக்கிங் எழுதியுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .