2021 ஜனவரி 23, சனிக்கிழமை

இரண்டாவது டெஸ்டிலும் வொற்சன் சந்தேகம்

A.P.Mathan   / 2012 நவம்பர் 14 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணிக்கும், அவுஸ்திரேலிய அணிக்குமிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை வீரர் ஷேன் வொற்சன் பங்குபற்றுவதற்கான வாய்ப்புக்கள் குறைவாகக் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடற்தகுதி தொடர்பான நிலை காரணமாகவே இந்த நிலை காணப்படுகிறது.

உள்ளூர்ப் போட்டியில் பங்குபற்றும் போது காயமடைந்த ஷேன் வொற்சன் முதலாவது போட்டிக்காக முழுமையான உடற்தகுதியை அடைந்திருக்காத நிலையில் அப்போட்டியில் பங்குபற்றியிருக்கவில்லை. இந்நிலையில் அவர் இரண்டாவது போட்டியில் பங்குபற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

தற்போதைய நிலையில் ஷேன் வொற்சன் முழுமையான உடற்தகுதியை அடையவில்லை என அழைக்கப்பட்டுள்ளது. ஷேன் வொற்சன் தன்னால் அதிக ஓவர்கள் பந்துவீச முடியும் என நிரூபித்தால் மாத்திரமே இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் சேர்க்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த அவுஸ்திரேலிய அணியின் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர், ஷேன் வொற்சன் வலைப் பயிற்சிகளில் சிறப்பாகச் செயற்படுவதாகவும், செவ்வாய்க்கிழமை ஷேன் வொற்சன் ஓட்டப் பயிற்சிகளில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை அவர் பந்துவீச்சுப் பயிற்சிகளில் ஈடுபடுவார் எனத் தெரிவித்த மிக்கி ஆர்தர், இவ்வார இறுதியில் அல்லது அடுத்த வாரத்தில் ஷேன் வொற்சனின் உடற்தகுதி தொடர்பாக முழுமையான முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

அடுத்த போட்டிக்கான அணி தெரிவுசெய்யப்படும் போது ஷேன் வொற்சன் கருத்திற் கொள்ளப்படுவார் எனத் தெரிவித்த மிக்கி ஆர்தர், ஆனார் ஷேன் வொற்சனை ஒரு சகலதுறை வீரராகவே அவுஸ்ரேலிய நிர்வாகம் கருத்திற்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .