2021 ஜனவரி 22, வெள்ளிக்கிழமை

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் வொற்சன்

A.P.Mathan   / 2012 நவம்பர் 16 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணிக்கும், அவுஸ்திரேலிய அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2ஆவது போட்டிக்கான அவுஸ்திரேலிய அணியின் 13 வீரர்கள் கொண்ட குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள 13 பேர் கொண்ட அணியில் ஷேன் வொற்சன் சேர்க்கப்பட்டுள்ளார்.

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் உபாதை காரணமாக சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்காத ஷேன் வொற்சன், இரண்டாவது போட்டிக்கான 13 பேர் கொண்ட குழாமில் சேர்க்கப்பட்டுள்ள போதிலும், அவரது உடற்தகுதியை அவர் நிரூபித்தால் மாத்திரமே அவர் விளையாடும் பதினொருவர் அணியில் சேர்க்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷேன் வொற்சனுக்கு ஏற்பட்ட கால் உபாதையிலிருந்து அவர் தொடர்ந்தும் முன்னேறி வருகிறார் எனத் தெரிவித்த பிரதம தேர்வாளர் ஜோன் இன்வெராரிற்றி, ஆனால் விளையாடும் பதினொருவர் அணிக்கான தேர்வில் கருத்திற் கொள்ளப்படுமளவிற்கு அவர் முழுமையான உடற்தகுதியை அடைந்து விடுவாரா என்பதை உறுதி செய்ய முடியாதுள்ளதாகத் தெரிவித்தார்.

முதலாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெளிப்படுத்திய திறமையான வெளிப்பாடு குறித்து தேசிய தேர்வாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவித்த அவர், முதலாவது நாளில் போதியளவு திறமைகளை வெளிப்படுத்தாத போதிலும் அதிலிருந்து மீண்டு வந்தமை மகிழ்ச்சிக்குரியது எனத் தெரிவித்தார்.

அறிவிக்கப்பட்டுள்ள 13 பேர் கொண்ட குழாம்:
மைக்கல் கிளார்க், ஷேன் வொற்சன், டேவிட் வோணர், எட் கோவன், ஷேன் வொற்சன், றிக்கி பொன்டிங், மைக்கல் ஹசி, மத்தியூ வேட், பீற்றர் சிடில், ஜேம்ஸ் பற்றின்சன், பென் ஹில்பன்ஹோஸ், மிற்சல் ஸ்ரார்க், நேதன் லையன்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .