2021 ஜனவரி 16, சனிக்கிழமை

நாளைய போட்டியில் டில்ஷான் இல்லை

A.P.Mathan   / 2012 நவம்பர் 16 , பி.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணிக்கும், இலங்கை அணிக்குமிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி நாளை ஆரம்பிக்கவுள்ள நிலையில், நாளைய போட்டியில் இலங்கை அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் திலகரட்ண டில்ஷான் பங்குபெற மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திலகரட்ண டில்ஷானுக்கு ஏற்பட்டுள்ள முதுகு உபாதை காரணமாகவே நாளைய போட்டியில் அவர் பங்குபெற மாட்டார் என இலங்கைக் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 3ஆவது ஒருநாள் சர்வதேசப் போட்டிக்கு முன்னதாக உபாதையடைந்த டில்ஷான், அப்போட்டியில் உபாதையுடன் பங்குபற்றி சதமொன்றையும் பெற்றிருந்தார். எனினும் அந்தப் போட்டியின் பின்னர் இடம்பெற்ற அடுத்த இரண்டு போட்டிகளிலும் டில்ஷான் பங்குபற்றியிருக்கவில்லை.

இந்நிலையில் டில்ஷானின் உபாதை இன்னமும் குணமடையாத நிலையில் அவர் நாளைய டெஸ்ட் போட்டியில் பங்குபற்றுவதற்கான உடற்தகுதிய திலகரட்ண டில்ஷான் அடையவில்லை என்பதால் அவர் நாளை ஆரம்பமாகவுள்ள போட்டியில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

இதேவேளை, திலகரட்ண டில்ஷானுக்குப் பதிலாக இளம் வீரரான திமுத் கருணாரத்ன இலங்கைக் குழாமில் சேர்க்கப்பட்டுள்ளார். அத்தோடு நாளை ஆரம்பமாகவுள்ள போட்டியில் திமுத் கருணாரத்ன தனது டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொள்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .