2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

முதல் நாளில் நியூசிலாந்திற்கெதிராக இலங்கை ஆதிக்கம்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 17 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணிக்கும், இலங்கை அணிக்குமிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியின் முதல் நாள் முடிவில் இலங்கை அணி ஆதிக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.

காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெறும் இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி இலங்கை அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாது சகல விக்கெட்டுக்களையும் இழந்து 221 ஓட்டங்களைப் பெற்றது.

ஆரம்பம் முதலே விக்கெட்டுக்களை இழந்த அவ்வணி ஒரு கட்டத்தில் 3 விக்கெட்டுக்களை இழந்து 40 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. 4வது விக்கெட்டுக்காக 90 ஓட்டங்கள் பகிரப்பட்ட போதிலும் அதன் பின்னர் விக்கெட்டுக்கள் தொடர்ச்சியாக இழக்கப்பட்டன.

துடுப்பாட்டத்தில் நியூசிலாந்து அணி சார்பாக பிரென்டன் மக்கலம் 68 ஓட்டங்களையும், டானியல் ஃபிளைன் 53 ஓட்டங்களையும், ரூகர் வான் வைக் 28 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக ரங்கன ஹேரத் 5 விக்கெட்டுக்களையும், ஷமின்ட எரங்க 3 விக்கெட்டுக்களையும், நுவான் குலசேகர 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

5 ஓவர்கள் மீதமாகவிருந்த நிலையில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி இன்றைய நாள் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 9 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

தனது அறிமுகத்தை மேற்கொண்ட திமுத் கருணாரத்ன ஓட்டமெதனையும் பெறாது ஆட்டமிழந்தார். நியூசிலாந்து அணி சார்பாக வீழ்த்தப்பட்ட விக்கெட்டை ரிம் சௌதி கைப்பற்றியிருந்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .