2021 ஜனவரி 22, வெள்ளிக்கிழமை

ஃபுல்ஹாமை வென்றது சன்டர்லான்ட்

A.P.Mathan   / 2012 நவம்பர் 19 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்றுவரும் இங்கிலாந்து பிறீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் சன்டர்லான்ட் அணி இலகுவான வெற்றிபெற்றுள்ளது. ஃபுல்ஹாம் அணிக்கெதிரான போட்டியில் சன்டர்லான்ட் அணி 3-1 என்ற கணக்கில் வெற்றிபெற்றுக் கொண்டது.

நேற்றைய போட்டி ஆரம்பித்தது முதல் சிறிது நேரத்திற்கு இரு அணிகளாலும் கோல்களைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் போட்டியின் 31ஆவது நிமிடத்தில் ஃபுல்ஹாம் அணியின் ஹன்கெலான்ட் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட ஃபுல்ஹாம் அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது.

முதற்பாதியில் இரு அணியும் கோல்களைப் பெற்றுக்கொள்ளாத நிலையில் முதற்பாதி 0-0 என்ற கணக்கில் சமநிலையில் காணப்பட்டது.

இரண்டாவது பாதியில், போட்டியின் 51ஆவது நிமிடத்தில் சன்டர்லான்ட் அணியின் பிளெற்சர் முதலாவது கோலைப் பெற்றுக்கொடுத்து சன்டர்லான்ட் அணிக்கு முன்னிலையை வழங்கினார். ஆனால் 62ஆவது நிமிடத்தில் ஃபுல்ஹாம் அணி பதிலடியை வழங்க இரு அணிகளும் தலா ஒரு கோலோ சமநிலையில் காணப்பட்டன.

ஆனால் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சன்டர்லான்ட் அணி போட்டியின் 65ஆவது, 70ஆவது நிமிடங்களில் மேலும் கோல்களைப் பெற்று 3-1 என்ற கணக்கில் வெற்றிபெற்றுக் கொண்டது.

இப்போட்டியில் ஃபுல்ஹாம் அணிக்கு ஒரு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்ட அதேவேளை, சன்டர்லான்ட் அணிக்கு 3 மஞ்சள் அட்டைகள் காண்பிக்கப்பட்டிருந்தன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .