2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

ஷேன் வொற்சன் முழுமையான உடற்தகுதியில் இருக்க வேண்டும்: பொன்டிங்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 20 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாளை மறுதினம் ஆரம்பிக்கவுள்ள அவுஸ்ரேலிய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான போட்டியில் ஷேன் வொற்சன் முழுமையான உடற்தகுதியுடன் காணப்பட்ட பின்னர் அணியில் விளையாடுவதே சிறப்பானது என அவுஸ்ரேலிய அணியின் துடுப்பாட்ட வீரர் ரிக்கி பொன்டிங் தெரிவித்துள்ளார்.

காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்குபற்றியிருக்காத ஷேன் வொற்சன், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பந்துவீச முடியாத போதிலும் தன்னால் துடுப்பாட்ட வீரராகப் பங்குபற்ற இயலும் எனத் தெரிவித்துள்ளார்.

அத்தோட 2ஆவது போட்டிக்காக அறிவிக்கப்பட்டுள்ள 13 பேர் கொண்ட குழாமிலும் அவர் இணைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள ரிக்கி பொன்டிங், ஷேன் வொற்சன் முழுமையான உடற்தகுதியில் காணப்பட்டால் மாத்திரமே இரண்டாவது போட்டியில் பங்குபெற வேண்டும் எனத் தெரிவித்தார்.

தனது காலில் உபாதையோடு ஷேன் வொற்சன் பங்குபற்றினால் அணியிலுள்ள ஏனைய வீரர்கள் மீது தேவையற்ற அழுத்தங்கள் உருவாகும் என ரிக்கி பொன்டிங் தெரிவித்துள்ளார்.

ஷேன் வொற்சன் வலைப்பயிற்சிகளில் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடினார் எனத் தெரிவித்த ரிக்கி பொன்டிங், ஆனால் களத்தடுப்பில் அவர் ஸ்லிப்ஸ் இலேயே களத்தடுப்பில் ஈடுபட்டார் எனவும், வேறு வகையான களத்தடுப்பில் அவர் ஈடுபட்டிருக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

எந்தவொரு வீரரும் 70 சதவீதமான உடற்தகுதியுடன் டெஸ்ற் போட்டியொன்றில் பங்குபெற முடியாது எனத் தெரிவித்த ரிக்கி பொன்டிங், துடுப்பாட்ட வீரராகவும், ஸ்லிப் களத்தடுப்பாளராக இருந்தாலும் 100 சதவீதமான உடற்தகுதியுடன் காணப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .