2021 ஜனவரி 27, புதன்கிழமை

அவுஸ்ரேலியாவிற்கான இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிப்பு

Menaka Mookandi   / 2012 நவம்பர் 20 , பி.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்ரேலியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை டெஸ்ட் குழாம் இலங்கைத் தேர்வாளர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. 16பேர் கொண்ட குழாமே அறிவிக்கப்பட்டுள்ளது.

மஹேல ஜெயவர்தன தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த அணியில் நியூசிலாந்துக்கெதிரான டெஸ்ற் தொடருக்காக அறிவிக்கப்பட்டிருந்த டெஸ்ட் குழாமில் இடம்பெற்றிருந்த வீரர்களில் 14 பேர் இடம்பெற்றுள்ளனர்.

அக்குழாமில் சேர்க்கப்பட்டிருந்த புதுமுக வீரரான தரிந்து கௌஷால் நீக்கப்பட்டு வேகப்பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் சேர்க்கப்பட்டுள்ளார். அத்தோடு திலகரட்ண டில்ஷானுக்கு மாற்று வீரராக முதலாவது போட்டிக்குச் சேர்க்கப்பட்ட திமுத் கருணாரத்னவும் இக்குழாமில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வேகப்பந்து வீச்சாளர்களாக நுவான் குலசேகர, சானக வெலகெதர, ஷமின்ட எரங்க, தம்மிக்க பிரசாத், நுவான் பிரதீப் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதோடு, சுழற்பந்து வீச்சாளர்களாக ரங்கன ஹேரத், சுராஜ் ரந்தீவ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அறிவிக்கப்பட்டுள்ள 16 பேர் கொண்ட குழாம் தவிர, லஹிரு திரிமன்ன, திஸர பெரேரா, ஜீவன் மென்டிஸ், அகில தனஞ்ய, அஜந்த மென்டிஸ் ஆகியோர் தற்காலிக வீரர்களாகத் தயார் நிலையில் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அறிவிக்கப்பட்டுள்ள 16 பேர் கொண்ட குழாம்:
மஹேல ஜெயவர்தன, அன்ஜலோ மத்தியூஸ், திலகரட்ண டில்ஷான், குமார் சங்கக்கார, தரங்க பரணவிதான, திலான் சமரவீர, பிரசன்ன ஜெனவர்தன, ரங்கன ஹேரத், நுவான் குலசேகர, ஷமின்ட எரங்க, சுராஜ் ரந்தீவ், டினேஷ் சந்திமால், சானக வெலகெதர, நுவான் பிரதீப், தம்மிக்க பிரசாத், திமுத் கருணாரத்ன

மாற்று வீரர்கள்:
லஹிரு திரிமன்ன, திஸர பெரேரா, ஜீவன் மென்டிஸ், அகில தனஞ்ய, அஜந்த மென்டிஸ்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .