2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

அவுஸ்திரேலிய, தென்னாபிரிக்க இரண்டாவது டெஸ்ட் நாளை

A.P.Mathan   / 2012 நவம்பர் 21 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணிக்கும், அவுஸ்திரேலிய அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி நாளை ஆரம்பிக்கவுள்ளது.

அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் இடம்பெறவுள்ள இப்போட்டி இலங்கை நேரப்படி நாளை காலை 5.30 இற்கு ஆரம்பிக்கவுள்ளது.

இரு அணிகளுக்குமிடையில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி ஆரம்பத்தில் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி மிகப்பெரிய ஓட்ட எண்ணிக்கையொன்றைப் பெற்றதோடு, அவுஸ்திரேலிய அணியின் முதல் 3 விக்கெட்டுக்களையும் மிக இலகுவாகக் கைப்பற்றிய போதிலும், எட் கொவான், அணித்தலைவர் மைக்கல் கிளார்க், மைக்கல் ஹசி ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டத்தின் மூலம் அழுத்தத்திற்குள்ளாகியிருந்தது.

இறுதி நாளில் அவுஸ்திரேலிய அணி வெற்றிபெறக் கூடிய வாய்ப்புக்கள் ஏற்பட்டிருந்த போதிலும், இறுதிநேரத்தில் போராடி வெற்றி தோல்வியற்ற முடிவைப் பெற்றுக் கொண்டிருந்தது.

நாளை ஆரம்பமாகவுள்ள போட்டி இடம்பெறவுள்ள அடிலெய்ட் ஓவல் மைதானம் துடுப்பாட்ட வீரர்களுக்குச் சாதகமானதாக அமையும் எனக் கருதப்படும் நிலையில் இரு அணியின் சுழற்பந்து வீச்சாளர்களும் முக்கியத்துவம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி சுழற்பந்து வீச்சாளரின்றிக் களமிறங்கியிருந்த நிலையில் நாளை ஆரம்பிக்கவுள்ள போட்டியில் இம்ரான் தாஹிர் என்னவாறான மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்ற எதிர்பார்ப்புக் காணப்படுகிறது.

இரு அணிகளும் உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவ்வுபாதைகளின் காரணமாக வாய்ப்புக்களைப் பெற்றுக் கொண்டுள்ள வீரர்கள் தங்களுக்கான வாய்ப்புக்களில் பிரகாசித்து நிரந்த அணியில் இடம்பெற்றுக் கொள்வதற்கு நாளைய போட்டி முக்கியமானது.

அவுஸ்திரேலிய அணியில் ஷேன் வொற்சனுக்குப் பதிலாக ரொப் குவைனி தனக்கான வாய்ப்பைப் பெற்றுக் கொண்டுள்ளதோடு, தென்னாபிரிக்க அணியில் ஜே.பி.டுமனி இற்குப் பதிலாக பஃப் டு பிளெஸிஸ் தனக்கான வாய்ப்பைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

இரண்டு வீரர்களும் தங்களை டெஸ்ட் அரங்கில் நிரூபிக்க முயற்சிகளை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளைய போட்டியில் பங்குபெறவுள்ள இரண்டு அணிகளின் விபரங்களும் ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

நாளைய போட்டிக்கான அணிகள்:

அவுஸ்திரேலியா:
மைக்கல் கிளார்க், டேவிட் வோணர், எட் கோவன், ஷேன் வொற்சன், றிக்கி பொன்டிங், மைக்கல் ஹசி, மத்தியூ வேட், பீற்றர் சிடில், ஜேம்ஸ் பற்றின்சன், பென் ஹில்பன்ஹோஸ், நேதன் லையன்

தென்னாபிரிக்கா:
கிரேம் ஸ்மித், அல்விரோ பீற்றர்சன், ஹசிம் அம்லா, ஜக்ஸ் கலிஸ், ஏ.பி.டி.வில்லியர்ஸ், ஜக்ஸ் ருடோல்ப், பஃப் டு பிளெஸிஸ், வேர்ணன் பிலாந்தர், மோர்னி மோர்க்கல், டேல் ஸ்ரெய்ன், இம்ரான் தாஹிர்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .