2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

தென்னாபிரிக்க, நியூசிலாந்து முக்கியமான போட்டி இன்று

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 26 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணிக்கும், தென்னாபிரிக்க அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட டுவென்டி டுவென்டி தொடரின் 3ஆவதும், இறுதியுமான போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இத்தொடரின் வெற்றியைத் தீர்மானிக்கும் போட்டியாக இது அமையவுள்ளது.

போர்ட் எலிசபெத்தில் இடம்பெறவுள்ள இப்போட்டி இலங்கை நேரப்படி இன்று மாலை 6 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது போட்டியில் தென்னாபிரிக்க அணி இலகுவான வெற்றியைப் பெற்றுக் கொண்டிருந்ததோடு, இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணி இறுதிப்பந்தில் வெற்றியைப் பெற்றிருந்தது.

இந்நிலையில் இன்றைய போட்டியில் இரு அணிகளும் வெற்றிக்காகப் போராடும் என்பதோடு, இத்தொடருக்குப் பின்னர் இடம்பெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்குச் சிறப்பான தன்னம்பிக்கையுடன் செல்வதற்கும் முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த போட்டியில் மார்ட்டின் கப்ரிலின் சிறப்பான சதம் நியூசிலாந்துக்குக்கு நம்பிக்கை தருவதோடு, தென்னாபிரிக்கா சார்பாக பஃப் டு பிளெஸிஸின் சிறப்பான துடுப்பாட்டம், கடந்த போட்டியில் டேவிட் மில்லரின் சிறப்பான அதிரடி ஆகியன நம்பிக்கை தருகின்றன.

தென்னாபிரிக்க அணி சார்பாகத் தடுமாறிவரும் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் றிச்சாட் லீவி இற்குப் பதிலாக ஜஸ்டின் ஒன்ரொங் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுவதோடு, வேறு மாற்றங்கள் எதிர்பார்க்கப்படவில்லை.

நியூசிலாந்து அணி சார்பாக இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ட்ரென்ட் போல்ட் பங்குபெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் அணிகள்:
தென்னாபிரிக்கா: ஜஸ்டின் ஒன்ரொங், ஹென்றி டேவிட்ஸ், குயின்டன் டீ கொக், பஃப் டு பிளெஸிஸ், பர்ஹான் பெஹர்டீன், டேவிட் மில்லர், ரொபின் பீற்றர்சன், றயன் மக்லரன், ஆரோன் ஃபங்கிசோ, மோர்னி மோர்க்கல், ரோறி கிளெய்ன்வெல்ட்ற்.

நியூசிலாந்து: ரொப் நிக்கல், மார்ட்டின் கப்ரில், பிரென்டன் மக்கலம், ஜேம்ஸ் ஃபிராங்ளின், கொலின் முன்ரோ, கொரே அன்டர்சன், நேதன் மக்கலம், ஜிம்மி நீஷம், ட்ரென்ட் போல்ட்ற், டக் பிரேஸ்வெல், ரொனி ஹீரா.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .