2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

பிரசன்ன ஜெயவர்தனவிற்குக் காயம்

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 26 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அணியின் விக்கெட் காப்பாளர் பிரசன்ன ஜெயவர்தன காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது பெருவிரலிலேயே இந்தக் காயம் ஏற்பட்டுள்ளது.

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சார்பாகத் துடுப்பெடுத்தாடும்போதே பிரசன்ன ஜெயவர்தன காயமடைந்தார். மிற்சல் ஜோன்சன் வீசிய பௌண்சர் பந்தைத் தடுத்தாட முற்படும்போது பிரசன்ன ஜெயவர்தனவின் பெருவிரலில் காயமேற்பட்டது. அப்பந்திலேயே அவர் ஆட்டமும் இழந்திருந்திருந்தார்.

ஆட்டமிழந்ததும் எக்ஸ் கதிர் பரிசோனைக்காக பிரசன்ன ஜெயவர்தன அழைத்துச் செல்லப்பட்டதோடு, அங்கு அவருக்கு சிறிய என்பு முறிவு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டத்தில்போது இலங்கை அணியின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான விக்கெட் காப்பாளரும், பிரசன்ன ஜெயவர்தனவிற்கு முன்னதாக இலங்கையின் டெஸ்ட் விக்கெட் காப்பாளராகச் செயற்பட்டவருமான குமார் சங்கக்கார பணிபுரிந்தார்.

குமார் சங்கக்கார ஒரு விக்கெட் காப்பாளர் என்பதால் இப்போட்டியில் பிரசன்ன ஜெயவர்தன பங்குபற்றினாலும், விக்கெட் காப்பில் ஈடுபட மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .