2021 ஜனவரி 23, சனிக்கிழமை

மூன்றாவது போட்டிக்கான அவுஸ்திரேலிய அணி அறிவிப்பு

A.P.Mathan   / 2013 ஜனவரி 02 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும், அவுஸ்திரேலிய அணிக்குமிடையிலான மூன்றாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டிக்கான அவுஸ்திரேலிய விளையாடும் பதினொருவர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை ஆரம்பமாகவுள்ள இந்தப் போட்டி சிட்னியில் இடம்பெறவுள்ளது.

இப்போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் தலைவர் மைக்கல் கிளார்க் பங்குபெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளதோடு, அவுஸ்திரேலிய அணி 4 வேகப்பந்து வீச்சாளர்கள், ஒரு சுழற்பந்துவீச்சாளருடன் களமிறங்கவுள்ளது.

மிற்சல் ஜோன்சன், பீற்றர் சிடில், மிற்சல் ஸ்ரார்க், ஜக்ஸன் பேர்ட், நேதன் லையன் ஆகியோரே பந்துவீச்சாளர்களாக நாளை களமிறங்கவுள்ளனர்.

அவுஸ்திரேலிய அணியின் தலைவரின் உடற்தகுதி தொடர்பான சந்தேகங்கள் நிலவி வந்த போதிலும், நாளை ஆரம்பிக்கவுள்ள போட்டிக்கான உடற்தகுதியை மைக்கல் கிளார்க் அடைந்துள்ளதாகவும், அதன் காரணமாக அவர் நாளைய போட்டியில் பங்குகொள்ளவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மேலதிக வீரராக குழாமில் காணப்பட்ட உஸ்மான் கவாஜா விடுவிக்கப்பட்டுள்ளார்.

3 போட்டிகள் கொண்ட இத்தொடரில் முதலிரண்டு போட்டிகளிலும் அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அறிவிக்கப்பட்டுள்ள அணி:
எட் கொவான், டேவிட் வோணர், பிலிப் ஹியூஸ், மைக்கல் கிளார்க், மைக்கல் ஹசி, மத்தியூ வேட், மிற்சல் ஜோன்சன், பீற்றர் சிடில், மிற்சல் ஸ்ரார்க், நேதன் லையன், ஜக்ஸன் பேர்ட்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .