2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

இலங்கை அணி வெற்றிபெற போராடும்: மஹேல

Menaka Mookandi   / 2013 ஜனவரி 02 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய அணிக்கெதிராக நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற முயற்சிக்கும் எனவும், அதற்கான நம்பிக்கை காணப்படுவதாகவும் இலங்கை அணியின் தலைவர் மஹேல ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஓர் இனிங்ஸ் 201 ஓட்டங்களால் படுதோல்வியடைந்திருந்த நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்வியை மறக்கும் முகமாக நடவடிக்கைளில் ஈடுபட்டதாகத் தெரிவித்த மஹேல ஜெயவர்தன, எவ்வாறு அது இடம்பெற்றது எனவும், எவ்வாறு அதை எதிர்காலத்தில் தடுப்பது என்பது தொடர்பாகவும் கவனத்தைச் செலுத்தியதாகத் தெரிவித்தார்.

கடந்த ஆண்டும் தென்னாபிரிக்காவில் வைத்து செஞ்சூரியன் மைதானத்தில் இரண்டரை நாட்களில் தோல்வியைச் சந்தித்த பின்னர் இலங்கை மீண்டு வந்த டேர்பன் மைதானத்தில் வைத்து வெற்றியைப் பெற்றுக் கொண்டதை ஞாபகப்படுத்திய மஹேல ஜெயவர்தன, இலங்கை அணியால் வெற்றியைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை காணப்படுவதாகத் தெரிவித்தார்.

இந்த அவுஸ்ரேலிய அணி பலமான அணி எனத் தெரிவித்த அவர், ஆனால் இலங்கை அணி தனது பலத்திற்கேற்றவாறு போட்டிகளில் பங்குபற்றுமாயின் நிச்சயமாக அவுஸ்ரேலியாவின் சவாலை எதிர்த்து வெற்றிபெற முடியும் என நம்பிக்கை வெளியிட்டார்.

  Comments - 0

 • Yaseenbawa Hussain Wednesday, 02 January 2013 03:42 PM

  எப்போதும் இப்படித்தான் சொல்ராங்க..

  Reply : 0       0

  ibnuaboo Thursday, 03 January 2013 07:22 AM

  சவால் போடுவதிலும், சூலுரைப்பதிலும் காலத்தை கடத்தி ரசிகர்களை எமாட்றாமல் வெற்றிபெற வேலையை பாருன்கப்பா.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .