2021 ஜனவரி 23, சனிக்கிழமை

இந்தியாவில் சாதிக்க எதிர்பார்க்கும் அலஸ்ரெயர் குக்

A.P.Mathan   / 2013 ஜனவரி 04 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளில் சாதித்ததைப் போன்று ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் சாதிக்க விரும்புவதாக இங்கிலாந்து அணியின் தலைவர் அலஸ்ரெயர் குக் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்காக இங்கிலாந்திலிருந்து புறப்படும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணி இந்தியாவில் வைத்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் வெற்றிகொண்டு சரித்திரம் படைத்திருந்த நிலையில் அத்தொடர் முடிவடைந்ததும் கிறிஸ்மஸ் விடுமுறைக்காக அவ்வணி இங்கிலாந்திற்குத் திரும்பியிருந்தது.

11ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்றவுள்ள இங்கிலாந்து ஒருநாள் சர்வதேசப் போட்டி அணி டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி வெளிப்படுத்திய சிறப்பான பெறுபேறுகளிலிருந்து தன்னம்பிக்கையைப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்த அலஸ்ரெயர் குக், குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்களைக் கையாண்ட விதம் தொடர்பாக தன்னம்பிக்கை கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.

ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை வெற்றிகொள்ள வேண்டுமாயின் அவ்வாறானதொரு சிறப்பான துடுப்பாட்டப் பெறுபேறுகளை மீண்டும் வெளிப்படுத்த வேண்டுமெனத் தெரிவித்த அலஸ்ரெயர் குக், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் சாதிக்கலாம் என்ற நம்பிக்கையுள்ளதாகத் தெரிவித்தார்.

இங்கிலாந்தின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அவ்வணியின் பிரதான வீரர்களான ஜொனதன் ட்ரொட், கிரேம் ஸ்வான், ஜேம்ஸ் அன்டர்சன் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதோடு, இளம் வீரரான ஜோனி பெயர்ஸ்ரோவும் இத்தொடரில் பங்குகொள்ள மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .