2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

'ரன் அவுட்'கள் தொடர்பாக ஆராய வேண்டும்: பிலிப் ஹியூஸ்

Menaka Mookandi   / 2013 ஜனவரி 04 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்ரேலிய அணி ரன் அவுட் முறையில் விக்கெட்டுக்களை இழப்பது குறித்து ஆராய வேண்டும் என அவுஸ்ரேலிய அணியின் துடுப்பாட்ட வீரர் பிலிப் ஹியூஸ் தெரிவித்துள்ளார். அத்தோடு எதிர்காலத்தில் அவை தவிர்க்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை, அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான 3வது டெஸ்ட் போட்டியில் இன்று அவுஸ்ரேலிய அணி 2 விக்கெட்டுக்களை ரன் அவுட் முறையில் இழந்திருந்தது. எட் கொவான், மைக்கல் ஹசி ஆகியோரே தேவையற்று ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்திருந்தனர்.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்த பிலிப் ஹியூஸ், இன்றைய தினம் 2 விக்கெட்டுக்கள் ரன் அவுட் முறையில் இழக்கப்பட்டதாகவும், அத்தோடு சேர்த்து இத்தொடரில் 4 விக்கெட்டுக்களை ரன் அவுட் முறையில் இழந்திருப்பதாக நினைப்பதாகவும் தெரிவித்த பிலிப் ஹியூஸ், அதுகுறித்து ஆராய வேண்டிய தேவையிருப்பதாகத் தெரிவித்தார்.

ரன் அவுட் முறையில் ஆட்டமிழப்பது சிறப்பானதல்ல எனத் தெரிவித்த பிலிப் ஹியூஸ், குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் ரன் அவுட் ஆட்டமிழப்புகள் தவிர்க்கப்பட வேண்டும் எனவும், அவை மிகப்பெரிய சந்தர்ப்பங்களாக அமைந்துவிடும் எனத் தெரிவித்தார்.

ஆகவே ரன் அவுட் ஆட்டமிழப்புகள் குறித்துக் கவனம் செலுத்த வேண்டுமென பிலிப் ஹியூஸ் தெரிவித்தார்.

ரன் அவுட் ஆட்டமிழப்புக்களைத் தவிர்ப்பதற்கு ஓட்டங்களை அழைக்கும் போது சத்தமாகவும், தெளிவாகவும் அழைக்க வேண்டும் எனத் தெரிவித்த பிலிப் ஹியூஸ், இத்தொடர் முடிவடைந்ததும் அணி வீரர்கள் அனைவரும் இதுகுறித்துக் கலந்துரையாடுவோம் எனவும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .