2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான அவுஸ்ரேலிய அணி அறிவிப்பு

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 05 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்ரேலியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும், அவுஸ்ரேலிய அணிக்குமிடையிலான இறுதி 3 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்குமான அவுஸ்ரேலிய ஒருநாள் சர்வதேசப் போட்டிக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

5 போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் அவுஸ்ரேலிய அணி இலகுவான வெற்றியைப் பெற்றுக் கொண்டுள்ள நிலையிலேயே இந்த அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள குழாமில், முதலிரண்டு போட்டிகளுக்கும் அறிவிக்கப்பட்ட குழாமிலிருந்து ஒரேயொரு மாற்றம் மாத்திரமே ஏற்படுத்தப்பட்டுள்ளது.

முதலிரண்டு போட்டிகளிலும் இடம்பெற்றிருந்த உஸ்மான் கவாஜா அக்குழாமிலிருந்து நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக ஷேன் வொற்சன் சேர்க்கப்பட்டுள்ளார்.

அண்மைக்காலமாக உபாதைகளால் அவதிக்கப்பட்டு வரும் ஷேன் வொற்சன், டெஸ்ற் போட்டிகளில் இனிமேல் பந்துவீசுவதில்லை என முடிவெடுத்துள்ளதன் பின்பு அவர் பங்குபற்றவுள்ள முதற் தொடராக இந்த ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர் அமையவுள்ளது.

அவுஸ்ரேலிய, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்றாவது போட்டி நாளைய தினம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--