2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

என் வாழ்வின் மிகப்பெரிய சாதனை: இலங்கை அணித்தலைவி ஷஷிகலா

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 06 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய அணியைத் தோற்கடித்து மகளிர் உலகக்கிண்ணத்தின் சுப்பர் 6 சுற்றுக்குத் தகுதிபெற்றமை தன் வாழ்நாளின் மிகப்பெரிய சாதனை என இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி ஷஷிகலா சிரிவர்தன தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்கெதிராக நேற்று இடம்பெற்ற போட்டியை வென்றால் மாத்திரமே சுப்பர் 6 சுற்றுக்குத் தகுதிபெறலாம் என்ற நிலையில் இலங்கை அணி நேற்றைய தினம் அதிரடியான வெற்றியைப் பெற்றிருந்தது. அப்போட்டியில் இலங்கை அணி 138 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்தது.

சுப்பர் 6 சுற்றுக்குத் தகுதிபெற்றமை தன் வாழ்நாளின் மிகப்பெரிய சாதனை எனக்குறிப்பிட்ட ஷஷிகலா சிரிவர்தன, தான் மிகுந்த மகிழ்வாக உள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த உலகக்கிண்ணமே தனது இறுதி உலகக்கிண்ணமாக அமையலாம் எனத் தெரிவித்த அவர், அதன் காரணமாக இத்தொடரில் சிறப்பாகச் செயற்பட விரும்பியதாகத் தெரிவித்தார்.

இத்தொடரின் முதற்போட்டியில் நடப்பு சம்பியன்களான இங்கிலாந்து அணியைத் தோற்கடித்த இலங்கை அணி, இரண்டாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்திருந்தது.

அப்போட்டியில் இலங்கை அணி சிறப்பாகக் களத்தடுப்பில் ஈடுபட்டிருக்கவில்லை எனத் தெரிவித்த ஷஷிகலா, சிறந்த களத்தடுப்பில் ஈடுபடும் அணியை ஈடுபடுத்தும் அணியைக் களத்தில் இறக்குவதற்காக 3ம் இலக்க வீராங்கனை பிரசாதினி வீரக்கொடியை அணியிலிருந்து நீக்கியதோடு, ரசங்கிக்காவை 3ம் நிலை வீராங்கனையாக முன்னேற்றியதாகத் தெரிவித்தார்.

நேற்றைய போட்டியில் ரசங்கிக்கா 84 ஓட்டங்களைக் குவித்ததோடு, போட்டியின் நாயகி விருதையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--