2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

மேற்கிந்தியத் தீவுகளைத் தோற்கடித்தது அவுஸ்ரேலியா

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 08 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்ரேலியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும், அவுஸ்ரேலிய அணிக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 4வது போட்டியில் அவுஸ்ரேலிய அணி வெற்றிபெற்றுள்ளது.

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 49.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 220 ஓட்டங்களைப் பெற்றது.

ஆரம்பத்திலிருந்து விக்கெட்டுக்களை இழந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, ஒரு கட்டத்தில் 4 விக்கெட்டுக்களை இழந்து 22 ஓட்டங்களையும், 6 விக்கெட்டுக்களை இழந்து 55 ஓட்டங்களையும், 8 விக்கெட்டுக்களை இழந்து 133 ஓட்டங்களை இழந்து 133 ஓட்டங்களையும் இழந்து தடுமாறியது. ஆனால் கெரான் பொலார்ட் சிறப்பாக ஆடி 220 ஓட்டங்கள் பெறுவதை உறுதி செய்தார்.

துடுப்பாட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பாக கெரான் பொலார்ட் 136 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 109 ஓட்டங்களையும், டெரன் சமி 42 பந்துகளில் 25 ஓட்டங்களையும், சுனில் நரைன் 22 பந்துகளில் 23 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் அவுஸ்ரேலிய அணி சார்பாக மிற்சல் ஜோன்சன், பென் கட்டிங் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், கிளின்ட் மக்காய், கிளென் மக்ஸ்வெல், ஜேம்ஸ் ஃபோள்க்னர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

221 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி 44.5 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. முதலாவது விக்கெட்டுக்காக 53 ஓட்டங்கள் பகிரப்பட்டதோடு, தொடர்ந்து வந்த வீரர்களும் சிறப்பாக ஆடினர்.

துடுப்பாட்டத்தில் அவுஸ்ரேலிய அணி சார்பாக ஷேன் வொற்சன் 84 பந்துகளில் 76 ஓட்டங்களையும், மைக்கல் கிளார்க் 65 பந்துகளில் 37 ஓட்டங்களையும், அடம் வோகஸ் 39 பந்துகளில் 28 ஓட்டங்களையும், ஆரொன் ஃபின்ச் 30 பந்துகளில் 25 ஓட்டங்களையும், பிலிப் ஹியூஸ் 44 பந்துகளில் 23 ஓட்டங்களையும் கைப்பற்றினர்.

பந்துவீச்சில் அவுஸ்ரேலிய அணி சார்பாக ரீனோ பெஸ்ட், சுனில் நரைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், அன்ட்ரே ரசல் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இப்போட்டியின் நாயகனாக கெரான் பொலார்ட் தெரிவானார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X