2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கலிஸ் ஆட்டம் இழப்புத் தொடர்பாக சர்ச்சை

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 17 , மு.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


தென்னாபிரிக்கக் கிரிக்கெட் வீரர் ஜக்ஸ் கலிஸ் பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆட்டம் இழப்பு வழங்கப்பட்டமை தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இந்த ஆட்டம் ழப்பு விடயத்தில் தவறு ஏற்பட்டுள்ளதைத் தற்போது சர்வதேச கிரிக்கெட் சபையும் ஏற்றுக்கொண்டுள்ளது.

தென்னாபிரிக்காவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்குமிடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாளான நேற்று ஜக்ஸ் கலிஸ் நடுவர் மீள்பரிசீலனைத் திட்டத்தில் ஆட்டமிழப்பு வழங்கப்பட்டமை தொடர்பாகவே இந்தச் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

சயீட் அஜ்மலின் பந்துவீச்சில் ஜக்ஸ் கலிஸ் துடுப்பெடுத்தாடும்போது அவர் பந்தொன்றைத் தடுத்தாட முனைந்தபோது, பந்து துடுப்பிலும் காற்தடுப்பிலும் பட்டதாக எண்ணி கள நடுவர் ஸ்டீவ் டேவிட் ஆட்டமிழப்பு வழங்கினார். எனினும் ஜக்ஸ் கலிஸ் உடனடியாகவே அந்த ஆட்டமிழப்பிற்கு எதிராக மீள்பரிசீலனை செய்தார்.

மீள் ஒளிபரப்புக்களின்போது பந்து துடுப்பில் பட்டிருக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் எல்.பி.டபிள்யூ முறையிலான ஆட்டமிழப்புப் பற்றி ஆராய்ந்தபோது, பந்து விக்கெட்டை உரசிச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. மீள்பரிசீலனை விதிகளின்படி 'நடுவர் தீர்ப்பு' தொடர்ந்தும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

நடுவர் பிடிக்கான ஆட்டமிழப்பையே வழங்கியதால், எல்.பி.டபிள்யூ முறையிலான ஆட்டமிழப்பை அவர் நிராகரித்ததாக அர்த்தம் என்பதால் ஜக்ஸ் கலிஸ் ஆட்டமிழக்கவில்லை எனத் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றபோதிலும், கள நடுவர் ஸ்டீவன் டேவிஸ் அதை ஆட்டமிழப்பு என வழங்கினார்.

இவ்விடயத்தில் தவறு ஏற்பட்டுள்ளதாக ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ள சர்வதேச கிரிக்கெட் சபை, ஜக்ஸ் கலிஸ் ஆட்டமிழப்பு வழங்கியிருக்கப்படக்கூடாது எனவும் தெரிவித்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .