2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

பாகிஸ்தானுக்கெதிரான மூன்றாவது போட்டியில் மோர்னி மோர்க்கல் இல்லை

A.P.Mathan   / 2013 பெப்ரவரி 19 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கும், தென்னாபிரிக்க அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் மோர்னி மோர்க்கல் பங்குகொள்ள மாட்டார் என அறிவிக்கப்படுகிறது.

இரண்டாவது போட்டியில் அவரது பின்தொடைத் தசைநாரில் ஏற்பட்ட உபாதையிலிருந்து அவர் குணமடைந்திருக்காததன் காரணமாகவே மூன்றாவது போட்டிக்கான குழாமிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.

மோர்னி மோர்க்கலுக்குப் பதிலாக தென்னாபிரிக்கக் குழாமில் கைல் அபொட் சேர்க்கப்பட்டுள்ளார். உள்ளூர்ப் போட்டிகளில் வெளிப்படுத்திய திறமைகளையடுத்தே அவர் இக்குழாமில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே இக்குழாமில் சேர்க்கப்பட்டிருந்த மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான ரோறி கிளென்ய்வெல்ட்ற் மூன்றாவது போட்டியில் பங்குகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

3 போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் தென்னாபிரிக்க அணி வெற்றிபெற்றுள்ள நிலையில், மூன்றாவது போட்டி எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--