2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

மூன்றாவது போட்டியில் ஹசிம் அம்லா சந்தேகம்

A.P.Mathan   / 2013 ஜூலை 24 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணிக்கும், இலங்கை அணிக்குமிடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் தென்னாபிரிக்க அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஹசிம் அம்லா பங்குபற்றுவது சந்தேகத்திற்குரியதாக மாறியுள்ளது. நேற்று இடம்பெற்ற போட்டியில் அவர் காயமடைந்துள்ளதையடுத்தே இந்நிலை ஏற்பட்டுள்ளது.
 
கவட்டுப்பகுதியில் தசைநார்க் கிழிவிற்கு உள்ளாகியுள்ள ஹசிம் அம்லா, நாளை மறுதினம் இடம்பெறவுள்ள மூன்றாவது போட்டியில் பங்குபற்றுவதே சந்தேகத்திற்குரியதாக மாறியுள்ளது.
 
ஹசிம் அம்லாவிற்கு ஏற்பட்டுள்ள வகையிலான உபாதைகள் முழுமையாகக் குணமடைய 3 தொடக்கம் 7 நாட்கள் செல்லும் எனத் தெரிவிக்கப்படுவதோடு, அவருக்கு தற்போது முழுமையான சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
நாளை மறுதினம் பல்லேகலவில் ஆரம்பிக்கவுள்ள போட்டியில் அவர் பங்குபற்றுவதை உறுதிப்படுத்தும் முகமாக சிகிச்சைகள் வழங்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, அவர் அவ்வாறு குணமடையாதுவிடின், நான்காவது போட்டியில் பங்குபற்ற எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 
நேற்றைய போட்டியில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த போது, இலங்கையின் 43ஆவது ஓவரில் ஹசிம் அம்லா உபாதைக்குள்ளாகி வெளியேறியிருந்ததோடு, துடுப்பெடுத்தாடவும் களமிறங்கியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--