2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

சச்சின் தொடர்ந்து விளையாட முடியாமை கவலை: கோலி

Kogilavani   / 2013 ஒக்டோபர் 16 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய அணியின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர் சச்சின் டென்டுல்கர் டெஸ்ற் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற முடிவெடுத்துள்ளமை கவலை தருவதாக இந்திய அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் விராத் கோலி தெரிவித்துள்ளார்.

சச்சின் டென்டுல்கர் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ள நிலையிலேயே விராத் கோலி இவ்வாறு தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

சச்சின் டென்டுல்கர் துடுப்பெடுத்தாடுவதைப் பார்த்து தான் வளர்ந்ததாகக் குறிப்பிட்ட விராத் கோலி, அவரைப் போன்று துடுப்பெடுத்தாட விரும்பியதாகக் குறிப்பிட்டார். எனவே சச்சின் டென்டுல்கர் ஓய்வு பெறுவது மிகவும் வருத்தமான தருணமாக தனக்கு அமையும் என அவர் குறிப்பிட்டார்.

சச்சின் டென்டுல்கரே இந்தியாவிற்கு அதிக போட்டிகளை வென்று கொடுப்பவராக இருந்திருக்கிறார் எனத் தெரிவித்த விராத் கோலி, தங்கள் அனைவருக்கும் மிகுந்த மன உத்வேகத்தை வழங்கியதாகக் குறிப்பிட்டார்.

24 வருடங்களாக சச்சினின்றி ஓர் இந்திய அணி இருக்குமெனத் தாங்கள் எண்ணியிருக்கவில்லை எனக் குறிப்பிட்ட விராத் கோலி, இறுதித் தடவையாக சச்சின் டென்டுல்கர் மைதானத்திற்குள் காலடி எடுத்து வைக்கும் போது தான் எவ்வாறு உணர்வார் எனத் தெரியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--