2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

தென்னாபிரிக்காவிற்கெதிரான பாகிஸ்தான் ஒரு நாள் ச.போட்டி குழாம் அறிவிப்பு

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 21 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அரபு இராச்சியத்திற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணிக்கும், பாகிஸ்தான் அணிக்குமிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான பாகிஸ்தான் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மிஸ்பா உல் ஹக் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்தக் குழாம் 16 பேர் கொண்ட குழாமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அநேகமாக எதிர்பார்க்கப்பட்ட வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தக் குழாமில், அண்மையில் நிறைவுபெற்ற சிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டிக் குழாமில் இடம்பெற்றிருக்காத உமர் அக்மல், சொஹைப் மசூத், சொஹைல் தன்வீர், வகாப் றியாஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
 
அந்தப் போட்டிகளுக்கான குழாமில் இடம்பெற்றிருந்த அன்வர் அலி, அசத் அலி, ஹரிஸ் சொஹைல் ஆகியோருக்கு இக்குழாமில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
 
தென்னாபிரிக்காவிற்கெதிரான டெஸ்ட் குழாமில் சேர்க்கப்பட்டிருக்காத சிரேஷ்ட வீரரான மொஹமட் ஹபீஸ் இக்குழாமில் சேர்க்கப்பட்டுள்ளார்.
 
அறிவிக்கப்பட்டுள்ள குழாம்:
மிஸ்பா உல் ஹக், அஹமட் ஷெஷாத், நசீர் ஜம்ஷெத், மொஹமட் ஹபீஸ், உமர் அமின், உமர் அக்மல், ஷகிட் அப்ரிடி, சயீட் அஜ்மல், அப்துர் ரெஹ்மான், மொஹமட் இர்பான், ஜுனைட் கான், சொஹைல் தன்வீர், வகாப் றியாஸ், சொஹைப் மசூத், அசத் ஷபீக், சப்ராஸ் அஹமட்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--